2026 மே 14, வியாழக்கிழமை

சித்தாண்டி - மாவடிவேம்பு பட்டதாரிகள் ஒன்றியத்தின் கௌரவிப்பு நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூன் 27 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


சித்தாண்டி - மாவடிவேம்பு பட்டதாரிகள் ஒன்றியத்தின் கௌரவிப்பு நிகழ்வு நேற்று வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் பாடசாலை அதிபர் மற்றும் பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்கள் மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

சித்தாண்டி - மாவடிவேம்பு பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் ம.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

ஏறாவூர் கோட்டக்கல்வி பணிப்பாளர் என்.குணலிங்கம்,  பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய நிருவாகத்தினர்கள், மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.

சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து  அதிதிகள் மற்றும் சாதனையாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பாடசாலை நல்லையா மண்டபத்தினுள் ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .