2026 மே 09, சனிக்கிழமை

dd

ஐந்து ஆண்டுகள் அபிவிருத்தித் திட்டம் தொடர்பிலான ஆராய்வு கூட்டம்

Kogilavani   / 2013 ஜூன் 27 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஐந்து ஆண்டு அபிவிருத்தித் திட்டம் குறித்த திணைக்களங்களின் முன்மொழிவுகள் தொடர்பான ஆராய்வுக் கூட்டங்கள் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்று வருகின்றன.

இதற்கமைவாக விவசாயம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட துறைகளுக்கான ஆராய்வுகள் நேற்றைய தினம் நடைபெற்றன.

இதில் விவசாயத் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், விதைகள் அத்தாட்சிப்படுத்தல் பிரிவு ஆகியவற்றினதும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி அபிவிருத்தி, வீதி, வீடமைப்பு, நீர்வழங்கலும் வடிகாலமைப்பும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், கல்வி, சுகாதாரம், கைத்தொழில் துறை, சூழலும் அனர்த்த முகாமைத்துவமும், உள்ளுராட்சித்துறை, கூட்டுறவுச் சங்கங்களின் அபவிருத்திகள், தொழில்துறை மேம்படுத்தல்கள் எனப் பல பிரிவுகளில் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான ஆராய்வுக் கூட்டங்கள் எதிர்வரும் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட அபிவிருத்தித் திட்டமானது 2013 முதல் 2017வரையில் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .