2026 மே 09, சனிக்கிழமை

dd

ஹிறா பவுண்டேசனினால் உதவிகள் வழங்கல்

Super User   / 2013 ஜூன் 27 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா மற்றும் காத்தான்குடியிலுள்ள அரபுக் கல்லூரிகளுக்கு பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் ஹிறா பவுண்டேசனினால் மின் விசிறிகள் மற்றும் உதவிகள் நேற்று புதன்கிழமை இரவு வழங்கப்பட்டன.

இந்த வைபவம் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை கட்டிடத்தில் நடைபெற்றது. காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஇ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்இ மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட்இ காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் அப்துல்லா ஆலிம் றஹ்மானி ஹசரத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரி, அல்மனார் அறிவியற் கல்லூரி, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் என்பவற்றிற்கு இந்த மின்விசிறிகள் வழங்கப்பட்டதுடன் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு இரண்டு இலட்சம் ரூபா நிதியும் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .