2026 மே 09, சனிக்கிழமை

ஆஸி.செல்ல முயன்றோர் தங்கியிருந்த இடத்திலிருந்து பெருந்தொகையான உணவு பொருட்கள் மீட்பு

Kanagaraj   / 2013 ஜூன் 27 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த வேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பெருந்தொகையான உணவுப் பொருட்களை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் கடற்கரையிலிருந்து இன்று வியாழக்கிழமை சட்டவிரேதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முற்பட்டபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து பெருமளவான ,சோயாமீட் அரிசி,சீனி மூடைகள் உட்பட பெருமளவான உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட 23பேரில்  ஒன்பதுபேர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் எனவும் 14பேர் தமிழர்கள் எனவும் கைதுசெய்யப்பட்டவர்களின் ஐந்து வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் உள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜத் பிரியந்த மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்; எனவும் பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் மேலும்  தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .