2026 மே 09, சனிக்கிழமை

பாம்பு தீண்டிய பெண் வைத்தியசாலையில்

Kanagaraj   / 2013 ஜூன் 27 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்புக்குத் தெற்கே 40 ஆம் கட்டை திக்கோடைக் கிராமத்தில் பாம்பு தீண்டியதில் பெண்ணொவருவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழன் மாலை எட்டு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

60 வயதான நடராஜா மனோரஞ்சிதமலர் என்பவரே பாம்புக்கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவருகின்றார்.

வீட்டு வாசலைக் கடந்து நடந்து வரும்பொழுதே பாம்பு தீண்டியுள்ளது. உடனடியாக சார்ஜர் லைற் உதவியோடு சுற்றுப்புறத்தில் தேடிப் பார்த்தபோது பெண்ணைக் கடித்த நெடுவளலைப் பாம்பு பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அது உடனடியாக தடியால் அடிக்கப்பட்டு கொல்லப்பட்டது. காயமடைந்த பெண்ணுடன் கொல்லப்பட்ட பாம்பும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

பாம்புக் கடிக்குள்ளான பெண் முன்னதாக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .