2026 மே 09, சனிக்கிழமை

dd

மட்டு. மத்தி வலய கல்வி பணிப்பாளரை விசாரணைக்காக அழைப்பு

Super User   / 2013 ஜூன் 28 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் அஹமட்லெப்பையினை விசாரணைக்காக மட்டு. மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்புவிடுத்துள்ளது.

விசாரணைகள் எதுவுமின்றி ஆசிரியரொருவரை இடமாற்றம் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே வலய கல்வி பணிப்பாளர் அழைக்கப்பட்டுள்ளார்.

இதனால் எதிர்வரும் ஜுன் 2ஆம் திகதி மட்டு. மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் தாமரைக்கேணி அலிஷாஹிர் மௌலானா வித்தியாலயத்தில் கடமைபுரிந்த எஸ்.எம்.எம்.நஸீர் எனும் ஆசிரியரை 41 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம் மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து குறித்த ஆசிரியர் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார். இதற்கமைவாகவே குறித்த வலய கல்வி பணிப்பாளர் விசாரணைக்காக அ10ணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சம்பவத்தை எதிர்த்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி விசாரணைககு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .