2026 மே 09, சனிக்கிழமை

'உரிமையை மையப்படுத்திய அணுகுமுறை' செயலமர்வு

Kogilavani   / 2013 ஜூன் 28 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


உரிமையை மையப்படுத்திய அணுகுமுறை என்ற தொனிப்பொருளிலான மட்டக்களப்பு மாவட்ட உதவித்திட்டமில் பணிப்பாளர்களுக்கான இரண்டுநாள் செயலமர்வு சத்துருக் கொண்டான் சர்வோதய நிறுவனத்தில் நடைபெற்றது.

நேற்றும் இன்றும் நடைபெற்ற இக் கருத்தரங்கை, சீ.பி.ரி.டி எனப்படும் சமூக மட்ட வியாபார மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி எனப்படும் அமைப்பு ( Community Business & technology Developers) ஏற்பாடு செய்திருந்தது.

இக்கருத்தரங்கில் சீ.பி.ரி.டி நிறுவனத்தின் அதிகாரியான கிர்த்சிறி தர்மபிரிய கலந்துகொண்டார்.  இக்கருத்தரங்கின்
விரிவுரையை இந்தியா ஒரிசா மானிலத்தைச் சேர்ந்த ராம்கிருஷ்ணா சுர்தியோ என்பவர் நிகழ்த்தினார்.

இச் செயலமர்வில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .