2026 மே 13, புதன்கிழமை

அசாத் சாலியின் வருகைக்கு எதிர்ப்பு: கழிவு எண்ணெய் வீச்சு

Kanagaraj   / 2013 ஜூன் 29 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான், எஸ்.எம்.எம்.முர்ஷித்

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயருமான அசாத் சாலி, ஓட்டமாவடிக்கு இன்று வருகைதரவிருந்த நிலையில் அவரது வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாத் சாலி தலைமையில் இன்று சனிக்கிழமை மாலை கூட்டம் நடத்தவிருந்த  விடுதி மற்றும் விடுதி உரிமையாளரின் வீடு ஆகியவற்றின் மீது இனந்தெரியாத நபர்கள் கழிவு எண்ணெய் ஊற்றியுள்ளனர்.

ஓட்டமாவடி மீறாவோடை வீதியிலுள்ள  மன்னுஸ்ஸல்வா எனும் தங்கு விடுதியின் மீதே இவ்வாறு கழிவு எண்ணெய் ஊத்தப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

அசாத் சாலி தலைமையில் குறித்த விடுத்தியில் இன்று மாலை 4.00 மணிக்கு கூட்டம் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .