2026 மே 09, சனிக்கிழமை

விஞ்ஞான ஆய்வுக் கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூன் 29 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மஹிந்தோதைய 1000 பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள மட்டக்களப்பு,  வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
80இலட்சம் ரூபாய் செலவில் இந்த விஞ்ஞான ஆய்வுக்கூடம் அமையப்பெறவிருப்பதாக நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்;து கொண்டு உரையாற்றிய மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் எஸ்.மோகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.சிறிகிருஸ்ணராஜா உட்பட ஆசியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பெற்றோர், நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மஹிந்தோதைய 1000 பாடசாலை அபிவிருத்தித் திட்டம் 5 கிலோ மீற்றருக்கு ஒரு பாடசாலை என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு அமுல்படுத்தப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .