2026 மே 09, சனிக்கிழமை

வறிய மாணவர்களுக்கு பாடசலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜூன் 29 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


போரினால் காயப்பட்டவர்களுக்கும், விதவைகளுக்கும், வறியவர்களுக்கும் உதவுவதற்கான கனேடிய, அமெரிக்க அமைப்பின் உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலுள்ள வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது, 86 மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் 86 மாணவர்களுக்கு எண்பத்தி ஆறாயிரம் ரூபாய் பெறுமதியான பாடசாலை பாதணிகள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் என்பவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பாடசாலை அதிபர் வி. மகேசரெட்ணம், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .