2026 மே 09, சனிக்கிழமை

புலமைப்பரிசில் நிதி வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜூன் 29 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு காத்தான்குடி நசீலா பவுண்டேசன் நிறுவனத்தினால் புலமைப்பரிசில் நிதி நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

நசீலா பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.அக்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா, காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஐ.எம்.சுபைர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையான குடும்பத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் 83 மாணவர்களுக்கு தலா ஒரு மாணவருக்கு மாதமொன்றுக்கு 1500 ரூபா வீதம் இரண்டு வருடங்களுக்கான புலமைப்பரிசில் நிதி வழங்கப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .