2026 மே 09, சனிக்கிழமை

யானைகள் அச்சுறுத்தல்: விவசாயிகள் கவலை

Kogilavani   / 2013 ஜூன் 29 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, ஈரளக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் விவசாய செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் யானைகளின் அட்டகாசத்தினால் தமது விவசாய நடவடிக்கைகளை கைவிட்டு அக்கிராமங்களில் இருந்து இடம்பெயர வேண்டி உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

ஈரளக்குளம், ஆவட்டியாவெளி, லாவாணை போன்ற பகுதிகளில் மரக்கறித்தோட்டம், நெற் செய்கை போன்றவற்றை இவ் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பகுதிகளுக்கு யானைகள் நுழைந்து விவாசய செய்கைகளை அழிப்பதுடன் தற்காலிக வீடுகளையும் அழித்து வருகின்றன. இதேவேளை, அவை உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 29.5.2013 அன்று ஈரளக்குளம் லாவாணை பகுதியில் விவசாயி ஒருவர் யானை தாக்குதலுக்கு இழக்காகி உயிரிழந்தார்.

இதனால் இப்பகுதியில் வாழ்ந்தும் வரும் தமது குடும்பங்கள் பெரும் அச்சத்திற்குள்; வாழவேண்டியுள்ளதாகவும் இதனால் தாம் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஆவட்டியாவெளி பகுதியில் 10 குடும்பங்கள் கால்நடைகளை வளர்ப்பிலும் மேட்டு நிலப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்த நிலையில்,  யானைகளின் அச்சுறுத்தலினால் இடம் பெயர்ந்துள்ளதாக அவ் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இம்மக்கள் கடந்த கால யுத்த சூழ்நிலைகளினால் இடம்பெயர்ந்து மீள குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கத.

எனவே இது தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .