2026 மே 09, சனிக்கிழமை

dd

காயமடைந்த விவசாயிகளை ததேகூ உறுப்பினர்கள் பார்வை

A.P.Mathan   / 2013 ஜூன் 29 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது ஒரு குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் வழிமறித்து  தாக்கியதில் காயமடைந்தவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சென்று பார்வையிட்டனர்.
 
பாதிக்கப்பட்டவர்களின் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
 
அத்தோடு இவ்விடயமாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களிடம் வாக்குறுதியளித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .