2026 மே 09, சனிக்கிழமை

முனைக்காட்டு கிராமத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 01 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முனைக்காட்டு கிராமத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள்  தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான   சிவநேசத்துரை சந்திரகாந்தனின்  நிதியொதுக்கீட்டில் முனைக்காட்டு கிராமத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

முனைக்காட்டு கிராமத்தின் அடிப்படை தேவைகள் தொடர்பிலும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய  அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டன.

விவேகானந்தா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவர்கள், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .