2026 மே 09, சனிக்கிழமை

dd

இளைஞர், யுவதிகளுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 01 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

'இளைஞர் சக்தி ஊக்குவிப்பு' எனப்படும் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கான செயலமர்வு ஒன்று  நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இளைஞர்களின் ஆலோசனைகளை உள்வாங்கி இளைஞர் வேலைத்திட்டங்களை மேம்படுத்தும் செயற்றிட்டங்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தச் செயலமர்வின்போது இளைஞர், யுவதிகளின் கருத்துக்களும் ஆலோசனைகளும் பெறப்பட்டன.

மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மண்டபத்தில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில்  இந்தச் செயலமர்வு நடைபெற்றது.

இந்தச் செயலமர்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரிகளான ஜே.கலாராணி, எம்.கமீர், மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் இளைஞர் அதிகாரிகள், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .