2026 மே 09, சனிக்கிழமை

மக்களின் பாவனைக்கு பொதுக்கிணறு கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 01 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒள்ளிக்குளம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொதுக்கிணறு ஒன்று மக்களின் பாவனைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது.

முஸ்லிம் பெண்கள் அமைப்பின்  நிதியொதுக்கீட்டில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் இந்தக் கிணறு நிர்மாணிக்கப்பட்டது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா இந்தக் கிணற்றை பொதுமக்களின் பாவனைக்கு கையளித்தார்.

இதற்கான நிகழ்வில் முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .