2026 மே 09, சனிக்கிழமை

தமிழ்மொழி பயிலுகின்ற பொலிஸ் அதிகாரிகள் மட்டக்களப்புக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 01 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் குருநாகல் பொலிஸ் சேவைப் பயிற்சி நிலையத்தில் தமிழ்மொழி டிப்ளோமா பாடநெறியை பயின்று வருகின்ற  சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன நல்லுறவை வளர்க்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ளனர்.

பொலிஸ் சேவைப் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்மொழியைப் பயின்று வருகின்ற 99 பொலிஸ் உத்தியோகத்தர்கள் 3 நாள் விஜயமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களுடன் உரையாடி பழகி இன நல்லுறவை வளர்ப்பதுடன், தமிழ்மொழியைப் பயின்று வருகின்ற தங்களுக்கு  தமிழ்மொழியைப் கதைப்பதற்கு இந்தப் பயணம் ஏதுவாக அமையும்; என்று எதிர்பார்ப்பதாக இவ்வாறு வருகை தந்துள்ள பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இவ்வாறு வருகை தந்துள்ள மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கண்ணகிபுரம் கிராம அலுவலகர் பிரிவிற்கான சிவில் பாதுகாப்புக் குழுவுடன்; இணைந்து வாழைச்சேனை இந்து மயானத்தை துப்பரவு செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

பொலிஸ் திணைக்களத்தின் வழிகாட்டலில் ஏசியா பௌண்டேஷனின் அனுசரணையில் இந்தச் சுற்றுப்பயணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள பொலிஸார் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .