2026 மே 09, சனிக்கிழமை

ஓட்டமாவடியில் புதிய பள்ளிவாசல்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 01 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


காத்தான்குடி வழிகாட்டல் நிலையத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி எம்.கே.வீதியில்  புதிதாக அமைக்கப்பட்ட மஸ்ஜிதுல் இர்ஷாத் பள்ளிவாசல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.06.2013) திறந்து வைக்கப்பட்டது.

மஸ்ஜிதுல் இர்ஷாத் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் மௌலவி எம்.எல்.எம்.இப்றாஹிம் தலைமையில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழாவில் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதியுமான அஷ்ஷேக் எம்.பி.எம்.அலியார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

30 இலட்சம் ரூபா செலவில் இரு மாடிகளைக் கொண்டதாக இந்தப் பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிவாசலின் மேல் தளத்தில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக நூலகம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக மஸ்ஜிதுல் இர்ஷாத் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் மௌலவி எம்.எல்.எம்.இப்றாஹிம் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .