2026 மே 09, சனிக்கிழமை

மட்டக்களப்பிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 01 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நாளை செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறும் பனம்பொருள் அபிவிருத்திச்சபை மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் திணைக்களங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நியமனக்கடிதங்களை அமைச்சர் வழங்கிவைக்கவுள்ளதாக ஈ.பி.டி.பி.யின் முன்னாள் அமைப்பாளர் கே.அருமைலிங்கம் தெரிவித்தார்.

மேலும், தாழங்குடாவில் நடைபெறவுள்ள மாதிரிக் கிராம திறப்பு விழாவிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்கவுள்ளதுடன், இம்மாவட்டத்தில இயங்கிவரும் பனம்பொருள் உற்பத்தி விற்பனை நிலையங்களுக்கும் அமைச்சர் விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கான நிகழ்வுகளில் மட்டக்களப்பு  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .