2026 மே 09, சனிக்கிழமை

பொலிஸார் பக்கச்சார்பின்றி விசாரணை செய்ய வேண்டும்: ஜனா

Kogilavani   / 2013 ஜூலை 01 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

'வாழைச்சேனை வாகனேரி பகுதியில் தமிழ் விவசாயிகள் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பின்றி விசாரணை செய்ய வேண்டும்' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  கோவிந்தன் கருணாகரம் (ஜனா) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'வாகனேரி பொத்தானை பகுதி தமிழர்கள் பாரம்பரியமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் பகுதியாகும். அப்பகுதியில் இரு சமூகத்தினரும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் விவசாயிகள் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் சில அரசியல் சக்திகளும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன முரண்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் சுயலாபம் அடையும் வகையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கருதும் வகையில் உள்ளது.

கடந்த 30 வருடகால யுத்தத்தின்போது இப்பகுதி தமிழ் விவசாயிகள் பல துன்பங்களால் அனைத்தையும் இழந்து இன்று ஓரளவு தங்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும்போது அவர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம்.

தாக்குதலுக்குள்ளான விவசாயிகளுக்கு நீதியையும் நியாயத்தினையும் பெற்றுக்கொள்ள பாதுகாப்பு தரப்பினர் பக்கச்சார்பின்றி நடவடிக்கையெடுக்க வேண்டும். 

அத்துடன் இந்த சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடுகளை பெற்றுக்கொடுக்க உரியவர்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

மீண்டும் ஒரு முறை தமிழ் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அனுமதிக்காத வகையில் அனைத்து தரப்பினரும் செயற்படவேண்டும்' என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .