2026 மே 09, சனிக்கிழமை

ஆஸி. செல்ல முயன்ற ஐவருக்கும் பிணை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 01 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்பொடி சசிகுமார், எம்.எஸ்.எம்.நூர்தீன்

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஐவரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த ஐவரையும் பிணையில் விடுவித்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.ரியாழ், இவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.ரியாழ் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்காக மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரான்குள விடுதி ஒன்றில் தங்கியிருந்த இந்த ஐவரையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு காத்தான்குடி பொலிஸார் கைதுசெய்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கிரான்குள விடுதிக்குச் சென்ற பொலிஸார், ஆண் பிள்ளைகள் இருவர் மற்றும் பெண் பிள்ளை அடங்கலாக ஐவரை கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .