2026 மே 09, சனிக்கிழமை

dd

அஸ்ஹர் மைதானத்தில் புத்தர் சிலை

Super User   / 2013 ஜூலை 01 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியால விளையாட்டு மைதானத்தில் திடீர் என புத்தர் சிலை முளைத்துள்ளதால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்தே இந்த புத்தர் சிலை இங்கு வைக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்திச் சங்கத்தினர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

பிறைந்துரைச்சேனையில் உள்ள அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் சாதுலியா வித்தியாலம் என்பவற்றுக்கு உள்ள ஓரே விளையாட்டு மைதானம் இம்மைதானமாகும். இம்மைதானம் வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு அருகில் அமைந்துள்ளது.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக பாடசாலைகளின் விளையாட்டு நிகழ்ச்சிகள், பிரதேச விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டுப் போட்டிகள் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்று வந்தன.

விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள புத்தி ஜயந்தி விகாரையின் விகாராதிபதியால் 01.03.2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 திகதி சுற்றுமதில் உடைக்கப்பட்டு இக் காணி புத்த ஜயந்தி விகாரைக்குறிய காணி என்றும் இதற்குள் வெளியாட்கள் எவரும் விளையாட வரக் கூடாது என்று அறிவித்தார்.

இது தொடர்பில்  பாடசாலை நிர்வாகத்தால் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு வாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் வழங்குத் தொடரப்பட்டு 11 தவனைகள் இடம் பெற்றதன் பின்னர் நீதி மன்றத்தால் விகாரைக்குறிய இடம் அல்ல என்றும் பாடசாலை மைதானம் என்று சுற்றிக் காட்டி 2013 ஆம் ஆண்டு ஜுன் 25 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.

இன்று அதிகாலை (01.07.2013) மீண்டும் புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதியினால் மைதானத்தின் நடுவில்  மேசையின் மீது புத்தர் சிலை ஒன்றை வைத்துள்ளதனால் குழப்பம் அடைந்த பாடசாலை நிருவாகம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.



  Comments - 0

  • anvardeen Monday, 01 July 2013 06:20 PM

    ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்க....!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .