2026 மே 09, சனிக்கிழமை

dd

'மட்டு.மத்தி கல்வி வலயம் முதல் வலயமாக விளங்குகிறது'

Kogilavani   / 2013 ஜூலை 02 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

'மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் இலங்கையில் முதல் வலயமாக காணப்படுவதற்கு பாடசாலைகள் மாத்திரமின்றி வெளிநிறுவனங்களின் ஒத்துழைப்பும் காரணமாகும்' என்று ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.எல்.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

ஏறாவூர் எக்ஸ்பிரஸ் டவர் நிறுவனத்தின் அனுசரணையுடன் நேற்று  முன்தினம்  நடைபெற்ற 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான செயலமர்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் உள்ள அனைத்து பாடசாலைகளும் மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளை அதிகரிப்பதற்கான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

இச்செயற்பாடுகளுக்கு வெளிநிறுவனங்களும் ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதனால் மாணவர்களின் பெறுபேறுகள் அதிகரிக்கின்றன. மட்டக்களப்பு மத்தி வலயம் இலங்கையில் முதல் வலயமாக தொடர்ச்சியாக இருதடவைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு பாடசாலைகள் மாத்திரமின்றி வெளிநிறுவனங்களும் இதற்கு காரணமாகும்.

எனவே, இவ்வாறான நிறுவனங்கள் கல்விக்காக ஆற்றிவரும் சேவையை நான் பாராட்டுகின்றேன்.

மாணவர்கள் யாராக இருந்தாலும் கல்வி கற்கின்ற வேளையில் ஒழுக்க விழுமியங்களுடன் கல்வி கற்க வேண்டும். ஒழுக்கம் இல்லாத கல்வியால் நாம் எந்த நன்மைகளையும் பெறமுடியாது. கல்வி கற்கின்ற மாணவர்கள் கல்வியோடு ஒழுக்க விழுமியங்ககையும் கற்றறிந்து கொள்ளவேண்டும்.

பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்துவதற்காக ஆசிரியர்களும் பெற்றோர்களும் எடுத்துவரும் முயற்சிகளுக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்கி எதிர்காலத்தில் நல்ல பிரஜைகளாக திகழவேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .