2026 மே 09, சனிக்கிழமை

இரண்டு அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Kogilavani   / 2013 ஜூலை 02 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு, வந்தாறுமூலை பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த இரண்டு அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு அதிகாரிகள் எச்சரிக்கை செய்யப்பட்டதாக செங்கலடி பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.ராஜ்குமார் தெரிவித்தார்.

மேற்படி பகுதியில் நேற்று திங்கட்கிழமை டெங்கு பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, 144 வீடுகள், 5 பாடசாலைகள், 3 ஆரம்ப பாடசாலைகள், 5 வெற்றுக்காணிகள், கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளடங்களாக 157 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

செங்கலடி சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் கே.ரவிச்சந்திரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில், பொலிஸார், பொதுசுகாதார பரிசோதகர்கள், உலக தரிசனம் நிறுவன தொண்டர்கள் ஆகியோர் இணைந்திருந்தனர்.

டெங்கு நுளம்புக்கு ஏற்ற வகையில் வீடுகள் மற்றும் நிறுவனங்களை வைத்திருந்தவர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக செங்கலடி பொதுச் சுகாராதார பரிசோதகர் எஸ்.ராஜ்குமார் மேலும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .