2026 மே 09, சனிக்கிழமை

dd

'கோப் ரெஸ்ட் இன்' உல்லாச விடுதி பாசிக்குடாவில் திறப்பு

Kogilavani   / 2013 ஜூலை 02 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

உல்லாச பொழுது போக்கிற்குப் பெயர்பெற்ற இடமான மட்டக்களப்பு பாசிக்குடாவில் 'கோப் ரெஸ்ட் இன்' எனும் உல்லாச விடுதி கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான  சிவனேசதுரை சந்திரகாந்தன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு 'கோப் ரெஸ்ட் இன்' உல்லாச விடுதியை சம்பிரதாய பூர்வமாகத் திறந்துவைத்தார்.

மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தனின் 3 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்படி 'கோப் ரெஸ்ட் இன்' விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பொழுது போக்கிற்கும் இலாபகரமான சேவைக்குமாக கூட்டுறவுச் சேவையை விஸ்தரிப்பதற்காகவே தான் இந்த உல்லாச விடுதிக்கு நிதியளித்து உதவியதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான எஸ்.சந்திரகாந்தன் இந்நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்தார். 

இந்த உல்லாச விடுதியில் சகல நவீன வசதிகளுடனான குளிரூட்டப்பட்ட மற்றும் சாதாரண அறைகள் சாதாரண விலைகளில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பஞ்சலிங்கம் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .