2026 மே 09, சனிக்கிழமை

எனது அமைச்சு நாடு பூராகவும் சேவையாற்ற வேண்டிய அமைச்சாகும்: டக்ளஸ்

Kogilavani   / 2013 ஜூலை 02 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


'எனது அமைச்சு நாடு பூராகவும் சேவையாற்ற வேண்டிய அமைச்சாகும். எனினும் அரசியல் சூழ்நிலைக் காரணமாக ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மத்திரம் சேவையாற்ற வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திலும் எனது அமைச்சு செயற்திட்டங்களை மேற்கொள்ளும்' என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மட்டக்களப்பு தாழங்குடா பனங்கைப்பணி மாதிரிக் கிராமத்தில் பனம் பொருள் தொழில் பயிற்சியை முடித்தவர்களுக்கான சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கும்  நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும் கொள்கையே எனது கொள்கையாகும். அந்த வகையில் நான் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்காக எனது அமைச்சின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பேன்.

பனை வளத்தை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். அதற்காக எனது அமைச்சினால் உதவிகளை வழங்கி வருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் தொழில் முயற்சியையும் மேம்படுத்த தேவையான உதவிகளை வழங்க ஆயத்தமாக உள்ளோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .