2026 மே 09, சனிக்கிழமை

தொழில் பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜூலை 02 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு தாழங்குடா பனங்கைப்பணி மாதிரிக் கிராமத்தில் பனம் பொருள் தொழில் பயிற்சியை முடித்த 195 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது

பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுமதி சீவரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு மட்டக்களப்பு தாழங்குடா பனங் கைப்பணி மாதிரிக் கிராமத்தில் பனம் பொருள் தொழில் பயிற்சியை முடித்தவர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட பனம் பொருள் உற்பத்திப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .