2026 மே 09, சனிக்கிழமை

'ஒரு பிரதேசம் முன்னேற்றமடைய இளைஞர்களின் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும்'

Kogilavani   / 2013 ஜூலை 02 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ ஹுஸைன்


'இளைஞர்களுடைய பிரச்சினைகளை அவர்களாகவே உணர்ந்து ஆக்கபூர்வமான வழிகளில் தீர்வு காண்பதற்கு முன்வந்திருப்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். ஒரு பிரதேசம் முன்னேற்றம் காண்பதற்கு அந்தப் பகுதியிலுள்ள இளைஞர்களின் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஏழைகளாக உள்ள இளைஞர், யுவதிகளை அபிவிருத்தியில் இணைத்துக் கொண்டு சென்றால் கிராமமும் நாடும் துரித வளர்ச்சியடையும்' என்று ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தெரிவித்தார்.

'ஏழைக் குடும்பங்களிலுள்ள இளைஞர் யுவதிகளின் சிந்தனையில் வரும் ஆக்கபூர்வமான மாற்றமே கிராம எழுச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்' என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடாந்தம் அமுல்படுத்திவரும் கிராமத்திற்கு ஒரு வீடு செயற்திட்டத்தின் கீழ் ஏறாவூர் மீராகேணியில் வறிய குடும்பமொன்றிற்கு வீடு கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (1) மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஐ.எம்.ஸஜீர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, சுமார் எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடொன்று கையளிக்கப்பட்டதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என். நைறூஸ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிராமத்திற்கு ஒரு வீடு 'ஸ்ரீலங்கா யூத்'  இளைஞர் வீடமைப்புத் திட்டத்திற்கென தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தலா ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் ரூபாவை வழங்குகின்றது.

வீடமைப்புக்குத் தேவையான மேலதிக நிதி சமூர்த்தி நலன்புரி ஆதாரம், சமூக சேவைகள் அமைப்புக்கள், மற்றும் பரோபகாரிகளிடமிருந்து பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .