2026 மே 14, வியாழக்கிழமை

மட்டு. தனியார் நிறுவனங்களுக்கு வட்டிப்பணம் செலுத்தமுடியாத இருவர் தற்கொலை

Menaka Mookandi   / 2013 ஜூலை 03 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதலான வட்டிக்கு சில தனியார் நிறுவனங்களிடம் தொழில் முயற்சிக்காக கடன் பெற்ற இருவர் அதை செலுத்த முடியாத நிலையில் அண்மையில் தற்கொலை செய்துகொண்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

'அரசாங்கமானது, அரச வங்கிகள் மற்றும் சமுர்த்தி வங்கிகள், திவிநெகு திட்டம் போன்றவற்றினூடாக தொழிற் முயற்சிகளை மேற்கொள்வதற்கான கடன்களை வழங்கி வருகின்றது. இவ்வாறான வாய்ப்புக்கள் இருக்கும் போது அதை நாடாமல் ஏன் அதிகளவான வட்டிகளுக்கு கடன் கொடுக்கும் நிறுவனங்களை மக்கள் நாடவேண்டும்' எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

'சில தனியார் நிறுவனங்கள் மட்டக்களப்பிலுள்ள கிராமங்களில் மக்களின் வீடுகளுக்கு சென்று அங்கு 27 வீத வட்டிக்கு கடன்களை கொடுத்து விட்டு இரண்டு வாரங்களின் பின்னர் அவர்களின் வீடுகளுக்கு சென்று கடனையும் அந்த வட்டியையும் கேட்டு நிற்கின்றனர். இதனை செலுத்த முடியாத இருவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமமொன்றில் அண்மையில் தற்கொலை செய்து கொண்டதாக எமக்கு அறிக்கை வந்துள்ளது.

சரியான திட்டங்களை அடையாளப்படுத்தி அதற்கான உதவியை பெற்று சரியான முறையில் அதை பயன்படுத்த வேண்டும். மீளெழுச்சி திட்டத்தின் கீழ் உதவியை பெற்ற ஒரு பயனாளி அதை விற்பனை செய்துவிட்டு தனது வீட்டில் தொலைக்காட்சிக்கான டிஸ்க் அண்டனா ஒன்றை வாங்கி அவரது வீட்டில் பொருத்தியுள்ளார்.

அதேபோன்று கிருமி நாசினிகளில் இருந்தும் இராசயன தாக்கங்கங்களில் இருந்தும் பாதுகாப்பு பெறும் பொருட்டு சேதனைப் பசளை தயாரிப்பதற்காக வழங்கப்பட்ட உபகரணங்களையும் பயனாளிகள் சிலர் விற்பனை செய்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடாது, தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் உபகரணங்களை சரியாக பன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்று அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .