2026 மே 14, வியாழக்கிழமை

dd

மாவட்ட உத்தியோகத்தர்களுக்கான மாநாடு

Super User   / 2013 ஜூலை 03 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர்களுக்கான மாநாடு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள நந்தகோபன் மண்டபத்திலேயே இந்த மாநாடு நடைபெற்றது.

சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைத்தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் பசீர் ஷேகுதாவூத் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் பி.குணரட்ணம், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டின் போது சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை திவிநெகும திணைக்களத்தினுள் உள்வாங்கி அவர்களை ஓய்வூதியத்திட்டத்திற்குள் உள்வாங்கியமைக்காக அரசாங்கத்திற்கும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் நன்றி தெரிவிக்கும் பிரேரணையொன்றும் நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .