2026 மே 14, வியாழக்கிழமை

dd

தமிழத்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை கொண்டாட நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜூலை 04 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

தமிழ் மொழிக்கு சர்வதேச ரீதியில் பெரும் தொண்டாற்றிய பேராசிரியர் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை மட்டக்களப்பு மாவட்டத்தில் கொண்டாட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதுநிலை கலாசார உத்தியோகத்தர் செல்வி தங்கேஸ்வரி கதிராமன் தெரிவித்தார்.

இவ்விழா தொடர்பிலான ஏற்பாடுகளுக்காக தனிநாயகம் அடிகளார் நுற்றாண்டு விழாச் சபை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இதன் தலைவராக பேராசிரியர் சி.மௌனகுருவும் துணைத் தலைவராக செல்வி க.தங்கேஸ்வரியும் பொது செயலாளராக எஸ்.இராஜேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டுவிழா சிறப்பு மலர் குழுவின் தலைவராக கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் சித்ரலேகா மௌனகுரு நியமிக்கப்பட்டுள்ளார்.

நுற்றாண்டுவிழாவில் ஆய்வரங்கம், சிறப்பு மலர் வெளியீடு  உட்பட பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

தற்போது பாடசாலைகளில் தனிநாயகம் அடிகளாரின் நினைவுப்பேருரைகள் இடம்பெற்றுவருகின்றன. இந்நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது பெயரில் ஆய்வு மையம் ஒன்றை நிறுவவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரான்ஸ், ரஷ்யாபோன்ற நாடுகளில் தமிழை வளர்த்த தனிநாயகம் அடிகளார் இந்தியாவில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் பேராதனை பல்கலைகழகத்திலும் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .