2026 மே 14, வியாழக்கிழமை

வாழைச்சேனையில் டெங்கொழிப்பு நிகழ்வு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 05 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது கட்டத்தினை முன்னிட்டு வாழைச்சேனை பிரதேச சபை பிரிவில் டெங்கு ஒழிப்பு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு உள்ளூராட்சித் திணைக்களம், வாழைச்சேனை பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், கோறளைப்பற்று பிரதேச சபை, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தின.

பாடசாலைகள், அரசாங்கத் திணைக்களங்கள் துப்பரவு செய்யப்பட்டதுடன் வாழைச்சேனை பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் ஆகிய இரண்டு பிரதேச செயலகப் பிரிவில் மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகளில் வாழைச்சேனை பிரதேச செயலக பிரதேச செயலாளர் ரீ.தினேஸ், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத், மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ரீ.சத்தியானந்தி, சுகாதார வைத்திய அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .