2026 மே 14, வியாழக்கிழமை

dd

பாரம்பரிய சிறுகைத்தொழிலை விருத்தி செய்ய பட்டதாரிகளின் அர்ப்பணிப்பு தேவை

Kogilavani   / 2013 ஜூலை 05 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


'பாரம்பரிய சிறுகைத்தொழிலை மட்டக்களப்பு மாவட்;டத்தில் அபிவிருத்தி செய்ய பட்டதாரி பயிலுனர்களின் ஒத்துழைப்பு அவசியமாகிறது' என பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஞானசோதி தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்
இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'பாரம்பரிய சிறுகைத்தொழில் துறையிலுள்ள குறைகளையும் தேவைகளையும் இனங்காண்பதனூடாக இத்துறையை இலாபமிக்க துறையாக மாற்றமுடியும்.

இம்மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் ஒரு பட்டதாரி பயிலுனர் இவ் அமைச்சினுடாக நியமிக்கப்பட்டுள்ளனர்' என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .