2026 மே 14, வியாழக்கிழமை

வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 05 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வீதி விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் வாழைச்சேனை இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்று நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

'சட்டத்தை மதித்து பிரதான வீதியைப் பாவித்து வீதி விபத்தை தடுத்து உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்' என்ற தொனிப்பொருளில் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.

ஒவ்வொருவரும் வீதியில் நடந்து செல்லும்போது பாதசாரியென்றும் வாகனத்தில் செல்லும்போது பிரயாணியென்றும் வீதியில் வாகனத்தைச் செலுத்தும்போது சாரதியென்றும் என்ற எண்ணத்தை மனதில்; கொள்ள வேண்டுமென இக்கருத்தரங்கின்போது தெரிவிக்கப்பட்டதுடன், இது தொடர்பான குறுந்திரைப்படமும் காண்பிக்கப்பட்டது.

வாழைச்சேனை இந்துக்  கல்லூரி பிரதான மண்டபத்தில் எஸ்கோ நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் பி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கான அனுசரணையை எஸ்கோ நிறுவனம் வழங்கியிருந்தது. 

நாட்டில் தற்போது அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் மோட்டார் வாகனப் பரிசோதகர் திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.



  Comments - 0

  • sathananthan.a Friday, 05 July 2013 02:10 PM

    எல்லோரும் கடமைகளை சரியாக தொடங்கினால் விபத்துக்களை குறைக்கலாம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .