2026 மே 14, வியாழக்கிழமை

dd

சின்ன முத்து தடுப்பு ஊசி ஏற்றும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூலை 06 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்
, ஏ.எச்.ஏ. ஹுஸைன், எஸ்.எம்.எம்.முர்ஷித்

சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தபட்டுள்ள சின்னம்மை தடுப்பு தினத்தையொட்டி ஆறு மாதம் தொடக்கம் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சின்ன முத்து தடுப்பு மருந்தேற்றும் நடவடிக்கை நேற்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார அலுவலகப் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் ஐந்து தாய் சேய் மருத்துவ நிலையங்களில் 493 பிள்ளைகளுக்குத் தடுப்பூசி ஏற்றுவதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம் நேற்று சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தலைமையில் ஆரம்பமானது.

சின்னமுத்து நோயிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான தடுப்பூசி ஏற்றும் விசேட வேலைத்திட்டம்  நாடு பூராகவுமுள்ள 600 தாய் சேய் நோய்த் தடுப்பு மருத்துவ நிலையங்களில் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .