2026 மே 14, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

Menaka Mookandi   / 2013 ஜூலை 05 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
, தேவ அச்சுதன், எஸ்.பாக்கியநாதன், தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பல பாடசாலைகளில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடைபெற்றன. காத்தான்குடி அந்நாசர் வித்தியாலயம் மற்றும் மில்லத் மகளிர் வித்தியாலயம், அல்அமீன் வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்கள் டெங்கு வழிப்புனர்வு ஊர்வலங்களில் ஈடுபட்டனர்.

காத்தான்குடி முதலாம் குறிச்சி அந்நாசர் வித்தியாலய மாணவர்களின் டெங்கு விழிப்புனர்வு ஊர்வலத்தில் காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஐ.எம்.சுபைர் மற்றும் பாடசாலை அதிபர் எம்.ஐ.எஅல்லாபிச்சை உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

டெங்கு நுளம்பை ஒழிப்போம், சூழலை தூய்மைப்படுத்துவோம் சுற்றாடலில் காணப்படும் குப்பை கூழங்களை அகற்றுவோம் என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஊர்வலத்தில் சென்ற மாணவர்கள் தாங்கியிருந்தனர்.

இதேவேளை, உயர்க்கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்துக்கான செயற்திட்டம் இன்றைய தினம், கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றும் நாளையும் அனைத்து ஊழியர்கள், உத்தியோகத்தர்கள், விரிவுரையாளர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும் வகையில் பிரமாண்டமான முறையில் சிரமதான பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடக்க நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் கிழக்கு பல்கலைக்கழக நிருவாக கட்டிட தொகுதி முன்பாக ஓன்று கூடல் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தி ஆரம்பித்தார். பதிவாளர் கே மகேசன் அவர்களும் உரையாற்றி உத்தியோகபூர்வமாக சிரமதான பணி தொடக்கி வைக்கப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஒத்துழைப்போடு பெருந்திரளான ஊழியர்கள் உச்சகமாக கலந்து கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் டெங்கு நோய் சம்பந்தமாக கிழக்கு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தை உத்தியோகபூர்வமாக விஞ்ஞான பீட பீடாதிபதி அவர்கள் உபவேந்தர், பதிவாளர் ஆகியோருக்கு கையளித்து அதன் பின் அனைவருக்கும் துண்டு பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.

அத்துடன், டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் சிரமதான நிகழ்வு இன்றுஇடம்பெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.முருகானந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் மற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஐவத்தியசாலை தரவுகளின்படி கடந்த 2011 இல் 1539 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகி 12 பேர் மரணமடைந்தனர். 2012 இல் 658 பேர் தொற்றுக்குள்ளாகி யாரும் மரணமடையவில்லை, 2013 முதல் இன்று வரை 437 பேர் தொற்றுக்குள்ளாகி 2 பேர் மரணமடைந்துள்ளனர் என வைத்தியசாலையின் பொதுச் சுகாதார பரிசோதகர் ரி;. முகுந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் டெங்கு நோய் பற்றி மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பது இத்தரவுகள் மூலம் தெரியவருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை சுகாதார அமைச்சினால்; கடந்த 01.07.2013 தொடக்கம் எதிர்வரும் 07.07.2013 வரை விசேட டெங்கு ஒழிப்பு வாரமாகப் பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .