2026 மே 14, வியாழக்கிழமை

dd

அமைச்சர் ராஜித மட்டக்களப்பிற்கு விஜயம்

Kogilavani   / 2013 ஜூலை 07 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


--எஸ்.எம்.எம்.முர்ஷித், எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன், தேவ அச்சுதன், க.ருத்ரன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேற்று சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜிதசேனாரட்ன அங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன் அபிவிருத்தி பணிகளையும் ஆரம்பித்து வைத்தார்.

இதற்கமைவாக, மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான எரிபொருள் நிலையத்தினை கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் ராஜிதசேனாரட்ன திறந்து வைத்தார்.

இபாட் திட்ட நிதியின் மூலம் இவ் எரிபொருள் நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த எரிபொருள் நிலையத்தின் மூலம் இப் பகுதியிலுள்ள மீனவர்கள் தமது இயந்திர படகுகளுக்கு இலகுவாக எரிபொருட்களை பெற்றுக் கொள்ளமுடியும் என்பது குறி;ப்பிடத்தக்கது.

இதேவேளை, வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவான் பிரதேசத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் அமுல்படுத்தப்படவுள்ள இறால் வளர்ப்புத் திட்டத்தையும் அமைச்சர் ராஜிதசேனாரட்ன கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

இவ் இறால் வளர்ப்பானது 150 மில்லியன் ரூபா நிதியில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சின் வழிகாட்டலில் இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், இறால், மீன், மட்டி என்பன வளர்கப்படவுள்ளன.

இத்தொழில் முயற்சிக்கான காணியை குத்தகை அடிப்படையில் வாகரை பிரதேச செயலகம் வழங்கியுள்ளது.

மேலும் 18 இலட்சம் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு பிராந்திய மீன் விற்பனைக் கூடமும் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.

இங்கு கட்டுப்பாட்டு விலைக்கு மீன்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .