2026 மே 14, வியாழக்கிழமை

dd

மட்டுநகரில் மாபெரும் அமைதி பேரணி

Kogilavani   / 2013 ஜூலை 07 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்
, எஸ். பாக்கியநாதன்

நாட்டில் அமைதி, சமாதானம் ஏற்பட்டு சகல மக்களும் அமைதியுடனும் சந்தோசமாகவும் வாழவேண்டி கிழக்கு பிராந்திய சத்ய சாயி சேவா இணைப்பு நிலையம் ஏற்பாடு செய்த மாபெரும் சமாதான பேரணி இன்று காலை மட்டக்களப்பு அரசடிச் சந்தியில் ஆரம்பமானது.

சத்ய சாயி நிலையத்தின் 24 கிளைகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

சத்ய சாயி கிழக்கு பிராந்திய இணைப்புக் குழுத்தலைவர் ஜி.விநாயகமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.சச்சிதானந்தன், மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி ஜெய்கா பணிப்பாளர் கே.தயாபரன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

அரசடிச்சந்தியில் ஆரம்பமான பேரணி பார்வீதி, டெலிகொம் வீதி, வேதாரணியம் வீதி, எல்லைவீதி, திருமலை வீதிஇ ஆஸ்பத்திரி வீதி வழியாகச்சென்று மாவட்ட சத்திய சாயி நிலையத்தை அடைந்தது.

பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஸ்ரீ சதிய சாயி பாபாவின் சிந்தனைகள் தாங்கிய பதாதைகளை ஆங்கிலம் தமிழ் ஆகிய மொழிகளில் பேரணியில் சென்றோர் ஏந்தியிருந்ததுடன் சாயி பஜனையும் ஒலிபரப்புச்செய்யப்பட்டது.






  Comments - 0

  • M.Thayaparan Monday, 08 July 2013 07:42 AM

    சாயி மதம்... சாயீசம் என்பது சத்யம், சாந்தி, அஹிம்சை முதலியவற்றின் அடிப்படையில்தான் ‘அன்பு’ என்பதே வேதமாகக் கொண்டு ஆன்ம ஈடேற்றத்திற்கான பாதையினை வகுத்துள்ளது. இந்த நடை பவனியானது, எதிர்வரும் 14.07.2013இல் இடம்பெறவுள்ள மட்/சாயி நிலையத்தின் புதிய ‘அனுக்கிரஹ’ மண்டபத்திறப்பு விழாவினையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வாகும். சாயி நாதன் உருவப் படத்துடன் புதிய மண்டபத்தில் பிரதிஸ்டை செய்யப்படவுள்ள சீரடி சாயிநாதனின் பளிங்குச் சிலை என்பன இவ்வூர்வலத்தில் மக்கள் அனுக்கிரகம் பெற எடுத்துச் செல்லப்பட்டன என்பதனை அன்போடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
    சாயி சேவையில்,
    மா.தயாபரன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .