2026 மே 14, வியாழக்கிழமை

dd

குர்ஆன் மதரசா முஅல்லிம்களுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 08 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடியிலுள்ள குர்ஆன் மதரசா முஅல்லிம்களுக்கான செயலமர்வொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காத்தான்குடி குர்ஆன் மரசாக்கள் அபிவிருத்தி சங்கத்தினால் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் இந்த செயலமர்வு நடைபெற்றது.

சங்கத்தின் தலைவரும் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரியின் அதிபருமான அப்துல்லா ஆலீம் றஹ்மானி ஹசரத் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் எம்.ரி.ஹாலித், சங்க ஸ்தாபகர் மௌலவி எம்.ஐ.ஆதம்லெவ்வை, காத்தான்குடி குர்ஆன் மரசாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் பரிசோதகர் மௌலவி எஸ்.எச்.எம்.சாஜஹான், மௌலவி எம்.ஏ.ஹாலித் ஹசன், மௌலவி கே.எல்.எம்.சுல்த்தான், சங்க செயலாளர் எஸ்.எல்.ஏ.கபூர் உட்பட உலமாக்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், காத்தான்குடியிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் குர் ஆன்மதரசாக்களில் கடமையாற்றும் முஅல்லிம்களும் முஅல்லிமாக்களும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .