2026 மே 14, வியாழக்கிழமை

காத்தான்குடி கரையோரப் பிரதேசங்களில் குழாய் நீர்விநியோகத் திட்டம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 08 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபைப் பிரிவின் கரையோர பிரதேசங்களில் முதன்முறையாக குழாய்நீர் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், இதற்காக நிலத்திற்கு அடியில்; குழாய்களைப் பொருத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த காலங்களில் காத்தான்குடியின் நகரப் பகுதிகளில் குழாய் நீர்த்திட்டம் அமுல்படுத்தப்பட்டபோதிலும், கரையோரப் பிரதேசங்களில் இவை நடைமுறைப்படுத்தவில்லை.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு அமைய தற்போது கரையோரப் பிரதேசங்களில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .