2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியில் மிதக்கும் உணவகம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி வாவியில் மிதக்கும் உணவகமொன்று  நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி நகர சபையால் கிண்ணியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பாதையில் (படகில்) நோன்புப் பெருநாளை முன்னிட்டு இம்மிதக்கும் உணவகம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், இம்மிதக்கும் உணவகம் சுமார் ஒரு வாரத்திற்கு செயற்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மிதக்கும் உணவகத்திற்கு வருகை தருவோர் வாவியின் ஓரத்திலிருந்து படகின் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இம்மிதக்கும் உணவகத்தில் சிற்றுண்டிகள் உள்ளிட்ட உணவுகள் வைக்கப்பட்டுள்ளன.

இதன் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் இம்மிதக்கும் உணவகத்தை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், நகர சபை உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X