2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அவுஸ்ரேலியா அரசாங்கம் விடுக்கும் செய்தி

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


வீசா இல்லாமல் படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு வரும் எவரும் அங்கு குடியேற முடியாது என 'அவுஸ்ரேலியா அரசாங்கம் விடுக்கும் செய்தி' என்ற துண்டுப் பிரசுரங்கள் வீடு வீடாக மக்களை அறிவுறுத்தும் செயற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வரையில் புதிய சட்டத்திற்கமைய வீசா இல்லாமல் படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு வருகை தரும் சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் பப்பவா, நியூக்கினுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

நீங்கள் அகதிகளாக அடையாயம் காணப்பட்டாலும் இப்போது பப்பவா, நியூக்கினியிலேயே குடியமர்த்தப்படுவீர்கள். அகதிகள் அல்லாத குடியேற்றக்காரர்கள் தமது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

இப்போதும் அதிகமான இலங்கையர்கள் மீண்டும் தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். ஆட்கடத்தல்கார்களின் பொய் வாக்குறுதிகளுக்கு ஏமாற வேண்டாம்.

நீங்கள் பணம் செலத்துவது அவுஸ்ரேலியாவுக்கான பயணச்சீட்டு அல்ல' என்ற பல வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசரங்கள் மக்கள் மத்தியில் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X