2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

திருமலை, அம்பாறையில் இந்திய வீட்டுத்திட்டம்; தக்க தருணத்தில் அமுலாக்கப்படும்: பி.எஸ்.ராகவன்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'ஒரு நிகழ்ச்சி நிரலின் படிமுறைப்படியே இந்திய வீடமைப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டம் தற்போது கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் இந்த வீட்டுத் திட்டம் தக்க தருணத்தில் அமுல்படுத்தப்படும்' என்று இந்திய வெளியுறவு அமைச்சின் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான விஷேட செயலாளர் பி.எஸ்.ராகவன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்திலுள்ள உறுகாமம், புல்லுமலை மற்றும் மங்களகம ஆகிய கிராமங்களில் முதற்கட்டமாக இந்த வீடமைப்புப் பணிகள்  கடந்த  மே மாதம் தொடக்கம் இடம்பெற்று வருகின்றன.

மேற்படி வீடமைப்புத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து நேரில் பார்வையிட வந்த இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் உறுகாமம் கிராமத்திற்கு சென்றிருந்தனர்.

இதன்போது, உறுகாமம் கிராமத்திலுள்ள  பயனாளிகளைச் சந்தித்து வீடமைப்புத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக கேட்டறிந்ததை அடுத்து உடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து அவர், 'இந்திய உதவி வீடமைப்புத் திட்டம் மிக சிறப்பாக திருப்திகரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது' என்றார்.

'வீட்டுத் திட்டத்துக்கான முதலாம்கட்டக் கொடுப்பனவு முடிவடைந்து இரண்டாவது கட்டக் கொடுப்பனவைப் பெறுவதற்கு பயனாளிகள் தகுதிபெற்றிருக்கின்றார்கள். வீடமைப்பு வேலைகள் பற்றி பயனாளிகள் திருப்பியடைகிறார்கள். அதற்கு மேல் எதுவுமில்லை. பயனாளிகளின் திருப்தியே இந்திய அரசின் திருப்தியாகும்.

ஒரு நிகழ்ச்சி நிரலின் படிமுறைப்படியே இந்த வேலைத் திட்டங்கள் அமுலாகின்றன. வீட்டுத் திட்டத்தைப் பொறுத்தவரையில், வடபகுதியிலிருந்து இப்பொழுது கிழக்குக்கு வந்திருக்கின்றோம். கிழக்கின் அடுத்த மாவட்டங்கள் இரண்டிலும் எப்போது இந்திய உதவி வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கும் என்பதை துல்லியமாகக் கூறிவிட முடியாது. திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலும் இந்திய உதவி வீட்டுத் திட்டம் தக்க தருணத்தில் அமுல்படுத்தப்படும்' என்றார்.

'வீடமைப்புக்கென்று ஒரு படிமுறையுண்டு. பயனாளிகளைத் தெரிவு செய்வதில் பல படித்தரங்கள் உள்ளன, அதன்படிதான் நடக்கும். இந்த வீடமைப்புத் திட்டத்தின் வடிவமைப்பு இந்திய அரசினுடையது அல்ல. இலங்கை அரசு தீர்மானித்தன் பிரகாரம் இந்த வீடமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் குடியிருப்பாளரின் விருப்பத் தெரிவுக்கும் இதில் முதலிடம் அளிக்கப்பட்டள்ளது. சிலவேளை நாம் அளிக்கும் பணத்திற்கும் மேலதிகமாக குடியிருப்பாளரும் மேலதிக பணத்தை முதலீடு செய்து தமது வீட்டை பெருப்பித்து அலங்காரப்படுத்திக் கொள்ளலாம். அதற்கு எதுவித கட்டுப்பாடும் கிடையாது' என்றும் அவர் கூறினார்.

'வீடமைப்புக்கான பணத்தை ஒரே தடவையில் ஒருபோதும் வழங்க முடியாது. அது சாத்தியமானதுமல்ல. ஒரு திட்டத்திற்கென்று உலக நடைமுறைகளும் பிராந்திய நடைமுறைகளும் உள்ளன.

வீடமைப்புக்கான பணத்தைத் தவணை முறையில் கட்டம் கட்டமாக கொடுப்பதால் ஒருபோதும் பிரச்சினை ஏற்படாது. ஒரு திட்டத்திற்கு ஒரேயடியாக பணத்தைக் கொடுப்பது உலகில் எங்குமே நடைமுறையில் இல்லை' என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X