2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட நடமாடும் மீன் வியாபாரி கைது

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

இரகசியமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நடமாடும் மீன் வியாபாரி ஒருவர் நேற்று மாலை மட்டக்களப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு ,மயிலம்பாவெளி,ஜனாதிபதி வீதி சேர்ந்த 52வயதுடைய அழகிப்போடி சுந்தரம் என்ற நடமாடும் மீன் வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யபடும் போது அவரிடம் 530கிராம் கஞ்சா இருந்ததாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் நடமாடும் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் குறித்த நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக மட்டக்களப்புப் பொலிஸாருக்குக் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனையடுத்து மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கிஞ்சிலி குணசேகரவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றப் புலன் விசாரணைப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  ரி.ஏ.என்.டீ.திம்பட்டு முனுவ தலைமையில் ஏ.ரி.எம்.சுபியான்,டபிள்யு.ரி.ஏ.மஜீத்,டபிள்யு.எம்.பிரியங்கர ஆகிய பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஒருவாரகாலமாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தன்னாமுனையில் வைத்து நேற்று புதன் கிழமை மாலை 6.00 மணிக்கு 530கிராம் கஞ்சாவுடன் குறித்த நபரை கைதுசெய்ததுடன் வியாபாரத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் ஏறாவூர்ப் பிரதேசத்தில் இருந்து கஞ்சாவினை எடுத்து வந்து மீன்வியாபாரம் செய்வதுடன் கஞ்சா விற்பனையில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளமை தெரிய வந்தள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X