2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இளைஞர் கழக நடவடிக்கைகள் குறித்து யுனிசெப் ஆராய்வு

Super User   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான நிபுணர் ஹே டோரிஜ் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.மாவட்டத்தின் இளைஞர் கழக நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காகவே மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது யுனிசெப் நிறுவனத்தினுடாக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களைப் பார்வையிட்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது யுனிசெப் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக நிபுணர் பி.பகிரதன், யுனிசெப் நிறுவனத்தின் பொறியியலாளர் மற்றும் மண்முனை மேற்குப் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X