2025 மே 05, திங்கட்கிழமை

பிறைந்துரைச்சேனை மைதான பிரச்சினைக்கு தீர்வு

Super User   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


ஓட்டமாவடி, பிறைந்துரைச்சேனையிலுள்ள இரு பாடசாலைகளினதும் விளையாட்டு மைதான பிரச்சினைக்கு இன்று செவ்வாய்க்கிழமை தீர்வு காணப்பட்டது.

பிறைந்தரைச்சேனை நூரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பிறைந்துரைச்சேனை சாதுலியர் மற்றும் அஸ்ஹர் ஆகிய இரண்டு வித்தியாலயங்களின் மாணவர்களும் விகாரைக்குச் சென்று விகாராதிபதியிடம் எங்களது எதிர்காலத்தை கருத்திற் கொண்டு விளையாட்டு மைதானத்தை விட்டுத் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதற்கிணங்க விஹாராதிபதி பூஜ நாவானே அபயவன்ஸ லங்கார தேரோ விளையாட்டு மைதானத்தை பாடசாலைக்கு விட்டுக்கொடுக்க இணங்கினார். விளையாட்டு மைதான காணி விகாரைக்கு சொந்தமான காணி என்று அந்த விகாரையின் விகாராதிபதி கூறிவந்தார்.

இது தொடர்பாக வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி பூஜ நாவானே அபயவன்ஸ லங்கார தேரோ கருத்துத் தெரிவிக்கையில்,

"இப்பிரதேசத்தின் அரசியல்வாதியான அமீர் அலி என்னிடம் பலதடவை கேட்டுக் கொண்டதற்கிணங்கவும் மாணவர்களின் நலனுக்காகவும் இக் காணியை விட்டுத் தருகிறேன்"என்றார்.

பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு காணியை விட்டுத் தந்ததற்காக ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதிக்கு பிறைந்துரைச்சேனை நூரிய்யா ஜூம்ஆ பள்ளி வாயல் நிர்வாகத் தலைவர் கே.பதுர்தீன் மற்றும் பாடசாலை மாணவர்களும் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

குறித்த விளையாட்டு மைதானம்  வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு சொந்தமான காணியில் அமைந்துள்ளது என்று அந்த விஹாரையின்  விகாராதிபதியினால் வேலி அடைக்கப்பட்டு மைதானத்தின் நடுவில் கடந்த 30.06.2013 இரவு புத்தர் சிலையும் வைக்கப்பட்டிருந்தது.

இக்காணி விகாரைக்குரியது என்று விகாராதிபதியினால் கடந்த 01.03.2010 அன்று மைதானத்தின் சுற்றுமதில் உடைக்கப்பட்டதுடன்  வெளியாட்கள் எவரும் விளையாட வரக் கூடாது என்றும் கூறியதற்கிணங்க பாடசாலை நிர்வாகத்தால் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக வாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் வழங்குத் தொடரப்பட்டு வழக்கு 11 தவனைகள் விசாரிக்கப்பட்டன. இந்த காணி விகாரைக்குரியது அல்லவென்றும்  பாடசாலை மைதானத்திற்குரியது என்றும் நீதிமன்றம் 25.06.2013 அன்று தீர்ப்பளித்தது.

இதற்குப் பின்னர் கடந்த 30.06.2013 மைதானத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாடசாலை நிர்வாகத்தினால் வாழைச்சேனை நீதவான் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இது தொடர்பான வழக்கு இடம் பெற்று வருகின்றது.

இந்நிலையிலேயே அந்த காணியை விளையாட்டு மைதானத்;திற்கு விட்டு கொடுப்பதற்கு விஹாராதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0

  • ash Tuesday, 17 September 2013 01:33 PM

    Discussion makes peaceful enviornment.
    Thanks Viharathipathi

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X