2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உளவியல் செயலமர்வு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரி.எல்.ஜவ்பர்கான்


சுகாதரா அமைச்சின் வழிகாட்டலில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஏற்பாடு செய்த கருவிலுள்ள குந்தைகளுக்காக கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஒருநாள் ஆரோக்கிய உளவியல் செயலமர்வு நேற்று காத்தான்குடி சுகாதார வைத்தியதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

சிறுவர்களின் பாதுகாப்பு பெற்றோர்களின் கைகளில் எனும் தொனிப்பொருளிலான இச்செயலமர்வில் காத்தான்குடி சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் யு.எல்.நசூர்தீன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழந்தை வைத்திய நிபுணர் திருமதி சித்ரா கடம்பநாதன் ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

மட்டக்களப்பு மாவட்ட தேசிய சிறுவர் அபிவிருத்தி அதிகார சபையின் உள சமுக இணைப்பாளர் என்.அசோக் பெர்ணாண்டோ தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

குழந்தைகளுக்கு கருவிலேயே போசாக்கு, உளநலம், உடல்ரீதியான வளங்கள், ஆரோக்கியம் இவைகளை தாய்மார்களினால் கருவிலேயே பெற்றுக்கொடுகக முடியும் அதனால் கர்ப்பிணி; தாய்மார்களுக்காக இச்செயலமர்வு நடத்தப்படுவதாக அங்கு வலியுறுத்தப்பட்;டது.

தெரிவுசெய்யப்பட்ட 40 கர்ப்பிணித்தாய்மார்கள் இதில் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .