2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் சுனாமி ஒத்திகை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


சுனாமி ஒத்திகை இன்று மட்டக்களப்பு பாலமீன்மடு கிராமத்தில் நடைபெற்றது.

சர்வதேச அனர்த்த ஆபத்து தனிக்கை தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமீன மடுக்கிராமத்தில் இந்த சுனாமி ஒத்திகை நடைபெற்றது.

இன்று பிற்பகள் 3.15மணிக்கு அனர்த்த அபாய ஒலி இக்கிராமத்தில் எழுப்பப்பட்டதும் மக்கள் ஓடோடி அந்த கிராமத்திலுள்ள பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு வந்து சேர்ந்தனர்.

இதையடுத்து அங்கு அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், மேஜர் ஆர்.டி.பி.ராஜபக்ச உட்பட கிராம உத்தியோகத்தர்கள், மற்றும் அனர்த்த முன்னாயத்த குழுக்கள் இராணுவத்தினர் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது இராணுவத்தினர் முதலுவிச் சிகிச்சை மற்றும் ஒத்திகையின்போது சுகயீன முற்றவர்களை பாடசாலைக்கு கொண்டுவருதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X