2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு பொலிஸுக்கு அருகில் கடையுடைத்து கொள்ளை

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 12 , மு.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு நகரில் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள பிரபல இலத்திரனியல் விற்பனை நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தக நிலையத்தின் கதவு பூட்டுகள் வெட்டப்பட்டு இந்த துணிகர கொள்ளைச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது வர்த்தக நிலையத்தில் இருந்துபெருமதி வாய்ந்த இலட்சக்கணக்கான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக அதிக பாதுகாப்பு உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த கொள்ளைசம்பவம் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வர்த்தக நிலையத்தில் களவாடிச்செல்லப்பட்டுள்ள பொருட்களின் பெறுமதிகள் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் அது தொடர்பில் பூரண விபரணம் தெரிவிக்கப்படும் என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகiளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .