2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

குப்பை மேட்டின் தீயை அணைக்கும் செயற்பாட்டில் மாநகர சபையினர்

Super User   / 2013 ஒக்டோபர் 14 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, திருப்பெருந்துறை பிரதேசத்தில் கடந்த பத்து தினங்களாக தீப்பிடித்து எரிந்து வரும் குப்பை மேட்டின் தீயை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் மட்டக்களப்பு மாநகர சபையினர் அணைத்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலுள்ள திருப்பெருந்துறையில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாநகர சபையின் குப்பை கொட்டும் பகுதி கடந்த பத்து தினங்களாக தீப் பிடித்து எரிந்து வருகின்றது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது இதனையடுத்து அவர் மேற்கொண்ட முயற்சியினால் இன்று இராணுவத்தினர், பொலிஸார், விமான படையினர் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுததாபனம் ஆகியோரின் உதவியுடன் மட்டக்களப்பு மாநகர சபையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது இந்த தீ அணைக்கும் நடவடிக்கை மும்முரமாக இடம்பெற்று வருவதுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறீதரன் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிஹ்ஸ்லி குணசேகர உட்பட மாநகர சபை அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டனர்.

இந்த இடத்தில் மட்டக்களப்பு மாநகர சபை குப்பைகளை கொட்டி திண்மக்கழிவகற்றும் இடமாக முகாமைத்துவம் செய்து வருகின்றது. இங்கு பிடித்துள்ள தீயினால் அந்த சுற்றுப்புறச் சூழல் மாசடைவதாக இந்த பகுதியிலுள்ள பொதுமக்கள் பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் இந்த இடத்தில் தீ பிடித்ததாகவும் அந்த தீயை அணைத்தும் அது அணையாமல் விடவே இன்று இந்த பாரிய தீ அணைப்பு நடவடிக்கை மேற்கொளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .